கொள்ளையரை முனிசேகர் சுட்டதில் குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறி தவறியது எப்படி?
கொள்ளையன் நாதுராம் பாலி மாவட்டத்தில் ராம்வாஸ் கிராமத்தில் பதுங்கி இருந்தான். பெரியபாண்டியன், முனிசேகர் துப்பாக்கிகளை ஆய்வு செய்த பின் பாலி எஸ்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரியபாண்டியன் தலைமையிலான 5 பேர் படை வியாழன் அதிகாலையில் சுற்றிவளைத்தது. செயல்படாத ரசாயன ஆலையில் காவலாளிகள் பாதுகாப்பில் நாதுராம் பதுங்கியிருந்தார்.
பெரியபாண்டியன் உள்ளிட்டோர் ஆலை புகுந்து நாதுராமை சுற்றிவளைத்தனர். நாதுராமும் உடன் இருந்தவர்களும் தாக்கியதில் முனிசேகர் உள்பட 4 பேர் தப்பி வெளிவந்தனர்.
கம்பியால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததால் பெரியபாண்டியனால் தப்ப முடியவில்லை. நாதுராமை நோக்கி முனிசேகர் சுட்ட குண்டு குறி தவறி பெரியபாண்டியன் மீது பாய்ந்தது என ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.