சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்புவுக்கு கிட்டப் பார்வை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பாஜகவுக்கு தமிழகத்தில் முகவரி இல்லை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தாம்பரத்தைத் தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று அவர் பேசி இருப்பதால், அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது என்பது தெரிகிறது. குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும். என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன். மேலும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் இருக்கிறது. குஷ்பு ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும், பாஜகவை பற்றி பேசித்தான் அரசியல் முகவரி தேடிக் கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார் என்று பதிலளித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
குஷ்புவுக்கு கிட்டப் பார்வை: தமிழிசை பதிலடி
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்புவுக்கு கிட்டப் பார்வை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பாஜகவுக்கு தமிழகத்தில் முகவரி இல்லை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தாம்பரத்தைத் தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று அவர் பேசி இருப்பதால், அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது என்பது தெரிகிறது. குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும். என்று கூறினார்…
1–2 minutes


Leave a Reply