Snack Shop - 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரியம்பட்டியை சேர்ந்தவர் பச்சையம்மாள். கணவனை இழந்த பச்சையம்மாள், சிற்றுண்டி கடை நடத்தி பிழைத்து வந்தார். அந்த கடையில் 27 வயது இளைஞர் தேவேந்திரன் வேலை செய்துவந்தார்.

கணவன் இல்லாத பச்சையம்மாளுக்கும், திருமணம் ஆகாத தேவேந்திரனுக்கும் நல்ல பழக்கம் உண்டாது. முதலாளி – தொழிலாளி என்ற உறவு நாளடைவில் கணவன் – மனைவி என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

பச்சையம்மாளுக்கு வயது அதிகம் என்பதால், தாலி கட்டி திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தனர்.

நேற்று முன் தினம் இரவும் அக்கப்பக்கத்தினர் கண்டபடி திட்டிப்பேசவும், மனமுடைந்த பச்சையம்மாளும், தேவேந்திரனும் விஷம் குடித்துவிட்டனர்.

விஷம் குடித்ததும் தாங்கமுடியாமல் இருவரும் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் தேவேந்திரன்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending