விடைத்தாளில் சினிமா பாடல் எழுதிய மாணவன்! ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
SUSIED MAN
SUSIED MAN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (17). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வுகள் தொடங்க உள்ளதால் பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் மாணவர் கார்த்திக் தாவரவியல் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்துள்ளார். இதைக் கண்டு பிடித்த ஆசிரியர் சகாதேவன், மாணவர்கள் முன் அதைப் படித்துக் காட்டியும், பெற்றோரை அழைத்துதான் வரவேண்டும் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.