லாரி மீது மோதிய வேன்! 8 பேர் உயிரிழப்பு!

Published:

accedent - 2026

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் என்ற இடத்தில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் வேன் மோதியுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டப்போது பயங்கர சத்தம் கேட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்கள் கதறியதால் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துசென்று மீட்டனர்.

மேலும் போலீசாரும் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வேன் நொறுங்கியதால் உள்ளே சிக்கியவர்களை பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

accedent 1 - 2026

பின்னர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், டெம்போ டிராவலர் வேனில் சென்று 15 பேரில் 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்த 8 பேரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று திரும்பிய போது தாமரமடகு – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அதிகாலையில் வரும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. ஓட்டுநர் உறங்கினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img