தென்காசி: காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder-1
murder-1

மனைவியை வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வந்த தம்பதி ராஜகோபால் – மல்லிகா. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வரும் நிலையில், மல்லிகா, பொன்ராஜ் என்வரது கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மல்லிகா வேலை செய்யும் கேபிள் நிறுவனத்திற்குள் சென்ற ராஜகோபால் மல்லிகாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

murder 1 - 2026

இதனை தடுக்க வந்த பக்கத்துவீட்டு பெண்ணையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளார்.

இதில் மல்லிகா உயிரிழந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜகோபாலை தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.