இன்றும், நாளையும் இரவு 9 மணிவரை கடைகள்: தமிழக அரசு!

Published:

sengottai road in lockdown
sengottai road in lockdown

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய துறைகள் தவிர வேறு எந்த அரசு அலுவலகங்களும் இயங்காது. தனியார் நிறுவனங்கள் செயல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் நாளையும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img