corono-dead-body-2
corono-dead-body-2

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவராக பணியாற்றியவர் ஹேமலதா (45).

இவரது கணவர் டேவிட் சுரேஷ் சென்னையில் உள்ள ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்

ஹேமலதா கொரோனா தீவிர நேரத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஜூன் 29ம்தேதி கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பின்னரும் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நருவீ மருத்துவமனையில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக ஹேமலதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அவரின் உடல் நிலை மோசமடையவே வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாரான போது மருத்துவர் ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ஜீவிதா என்கிற 20 வயதுடைய ஒரு மகளும் உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா நோய் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் நோய் தொற்று அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending