தன்னை விட வயது மூத்தவருடன் 16 வயது மகளுக்கு திருமணம்! தந்தை கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
child-marriage
child-marriage

தன்னை விட ஒரு வயது பெரிய நபருக்கு தனது மகளை தந்தையே திருமணம் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் 16 வயதான தனது மகளை 41 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்

சிறுமியின் தந்தை பொன்னுசாமி (40), மாப்பிள்ளை சுரேஷ் (41) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அணைக்கட்டு அடுத்த ஒக்கனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவரின் உறவினர் மகனான பள்ளிகொண்டா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை இவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெறும் நிலையில் கழனிபாக்கம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சிறுமி திருமணம் குறித்து இரு வீட்டார் குடும்பத்துடனும் விசாரணை நடத்தினர்.

இதில் குழந்தை திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக அவரது தந்தை மற்றும் புது மாப்பிள்ளை சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.