சனிக்கிழமை தான் சூப்பர் … திருடன் தேர்ந்தெடுத்த நாள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Kovil theft
Kovil theft

சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியில் ஒரே கோயிலைக் குறிவைத்து தொடர்ந்து திருடி வரும் கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பீர்க்கன்கரணை பகுதியில் செல்வ விநாயகர் கோயில் உண்டியலில் 4 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் அடிக்கடி கோயில் உண்டியலில் பணம் காணாமல் போவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்ததுடன், கோயிலில் சி.சி.டி.வி கேமராவையும் பொருத்தியுள்ளனர். ஆனாலும் மீண்டும் பணம் திருட்டு போயுள்ளது.

இதையடுத்து , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருடன் ஒருவன் சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்து , தாமிரக் கம்பியில் சூயிங் கம் வைத்து உண்டியலில் விட்டு பணத்தைத் திருடுவது தெரியவந்துள்ளது .

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பொதுமக்கள் மறைந்திருந்து திருடனைப் பிடிக்க முயன்ற நிலையில் அவன் தப்பியோடியுள்ளான் . இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சனிக்கிழமை திருடனை தேடி வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.