anand raj
anand raj

கட்டாயப்படுத்தி சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராஜ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு தாலி கட்ட முயற்சி செய்துள்ளார்.

மேலும் ஆனந்தராஜ் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து சென்று விஷச் செடியை தின்றுள்ளார்.

இதனை அடுத்து மயங்கி கிடந்த அந்த சிறுமியை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டாயப்படுத்தி சிறுமிக்கு தாலி கட்ட முயற்சி செய்த குற்றத்திற்காக ஆனந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending