Temple undiyal - 2026

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன், ராஜா ஆகியோர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று வழக்கம்போல் நடத்தப்படும் பூஜைகளை முடித்துவிட்டு ஹரிஹரசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் ராஜா கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் அங்கு வளர்ந்து வரும் கோவில் பூனை பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. இது குறித்து ராஜா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending