muthukumar
muthukumar

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரில் வசித்து வந்தவர் செல்வ முத்துக்குமார். இவரும், அவரது உறவுக்காரப் பெண் நித்யாவும் 8 ஆண்டுகளாக காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த செல்வம் முத்துக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று அதிகாலை அவரது மனைவி நித்தியாவும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமான இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் காதல் கைகூடிய தம்பதியினர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending