robbery
robbery

தபால்காரரின் வீட்டில் 13 அரை பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள நரிகட்டியூர் பகுதியில் மோதிலால் நேரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தபால்காரர் ஆக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டார்.

இதனையடுத்து மோதிலால் நேரு வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 13 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

எனவே அருகிலுள்ள பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் மோதிலால் நேரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending