அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டுசாலையில் உள்ள செவிடன்காடுகிராமத்தில் முத்துமாரியம்மன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் விழாநடந்தது.
மன்னர் ஆட்சி காலத்தில் வீரர்களின் திறமைகளை சோதிக்க நடத்தப்பட்ட வீர விளையாட்டுகளில் வழுக்குமரம் ஏறும் விழாவும் ஒன்றுஅதன் படி சுமார் 50 அடிஉயரமுள்ள மரத்தை வெட்டி சுத்தப்படுத்தி வளவளப்பாக மாற்றி அதைகிராமத்தின் மையப்பகுதில் நட்டு அதில் மரத்தின் உச்சியில் பரிசுபொருட்களையும் அதன்அருகில் விளக்கெண்ணை ஊற்றி வைப்பர் அந்தவிளக்கெண்ணை மரத்தில் படும்போது மேலும் வளவளப்பு ஏற்பட்டு வழுக்கல் ஏற்படும் அதன்பின்னர் வீரர்கள் மரத்தில் ஏறுவர் இதில் நடைபெற்றபோட்டியில் 8 பேர் கொண்ட 15 குழு கலந்துகொண்டு இறுதியில் எரிச்சி காரக்கொல்லை அணியினர் போட்டியில் இறுதி நிலையை அடைந்தனர் விழாவை முன்னிட்டு ஆவுடையார்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த போட்டியை பல ஆயிரம் பேர் கண்டு கழித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending