rathayathra - 2026

நேற்று ராமராஜ்ய ரதம் தமிழகத்தில் நுழைந்தபோது திமுக உள்பட பல லெட்டர்பேட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நடந்த போராட்டத்தில் காலையில் கைதான அரசியல் தலைவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்

இந்த நிலையில் நேற்று காலையில் ராமராஜ்ய ரதம் செங்கோட்டை வழியாக தமிழகத்தில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் அநாகரீகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவற்றில் ஒன்று மயிலாடுதுரையில் ராமர் படத்தை அவமதிப்பு செய்தது.

இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறையில் மறியலின்போது ராமர் படத்தை அவமதித்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி செல்லபாண்டியன் உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையிலடைக்கப்பட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending