தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தினந்தோறும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் செய்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கையில் உள்ள பதாகையில் ”விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக, மத்திய அரசே ராஜினாமா செய்’ என்று எழுதப்பட்டிருந்தது
ஆனால் யாரோ சில நெட்டிசன்கள் போட்டோஷாப் மூலம் அவர் கையில் வைத்திருந்த பதாகையில், ‘தமிழக, மத்திய அரசே வஞ்சிக்கும் விவசாயிகளை ராஜினாமா செய்’ என்று மாற்றியிருந்தனர். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது