இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரான ஜக்மோகன் டால்மியாவுக்கு (வயது 75) நேற்று இரவு 9 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டார். மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய வால்வில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதனை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் ஜக்மோகன் டால்மியா அனுமதிக்கப்பட்டபோது அவரது மகன் அபிஷேக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியும் உடனிருந்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending