சென்னை: மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி, இன்று மும்பையின் புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்யப்பட்டார். மதுரையில் திமுகவின் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அட்டாக் பாண்டி, இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருக்கமாகவும் வலது கையாகவும் செயல்பட்டுவந்தவர். அட்டாக் பாண்டி, முன்னாள் மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் தலைவராக இருந்தார். மேலும், மதுரை மாநகர திமுகவின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டார். மதுரையில் கொலை,ஆள் கடத்தல், நில அபகரிப்பு என இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன.
Popular Categories