தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி புலி’  திரையிடப்படு வெளியாகுமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பல நாட்களாக அச்சம் நிலவியது.நடிகர் விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் இன்று (அக்.1) தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, விஜய் வீட்டில் வருவான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் ‘புலி’ படம் திட்டமிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதிலும் சிக்கல் நீடித்தது.

 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான க்யூப் (QUBE) உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முறையாகச் செய்வதி மேலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இப்படம் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.இந்தநிலையில், சென்னையில் உள்ள ஜெமினி லேப்-பில் ‘புலி’ படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். க்யூபுக்கு செலுத்த வேண்டிய பணம் அதிகமாக இருப்பதால், 10 மணிக்கு வங்கிகள் திறந்ததும் தான் தொகையை செலுத்த முடியும் என்பதால், அதற்குப் பிறகே படம் வெளியாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

 இதனிடையே, திடீரென 10 மணி காட்சியும் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் பணம் திரும்ப தரப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அந்த பகுதியே களேபரம் ஆனது.இதனிடையே, படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் ‘புலி’ தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.

 இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். அதன்படி, காலை 10 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் ‘புலி’ படம் திரையிடப்பட்டது.இந்நிலையில், மதுரையில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் ரசிகர்களுக்கு காலை 5 மணிக்கு பிரத்யேக காட்சி போட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையரங்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனிடையே, சினிமா காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 10 மணிக்கு சினிமா திரையிடப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

மதுரையில் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending