தேனி வனத்துறை, மேகமலை வன உயிரின கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்க உள்ளது.
மாமிச, தாவர உண்ணிகள் , தாவரங்களும் கணக்கெடுக்கப்படும்.நான்கு ஆண்டிற்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்நிலையில் 2018க்கான கணக்கெடுப்பு பணிகள் நாளை துவங்குகிறது. இதில் தேனி வனக்கோட்டம் 38 பகுதிகளாகவும், மேகமலை 53 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அலுவலர், வன ஆர்வலர் உள்ளிட்ட குழு கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.
அப்பணியில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாலை தங்களின் முகாமிற்கு சென்று பணியை துவங்க உள்ளனர். அதனை தொடர்ந்து 8 நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கும். 4 நாட்கள் மறைமுக கணக்கெடுப்பில் ஒரு பகுதிக்கு 15 கிலோ மீட்டர் அளவு கணக்கெடுக்கப்படும்.
இதில் வனவிலங்குகளின் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்படும். 4 நாட்கள் நேரடி கணக்கெடுப்பில் 2 கிலோ மீட்டர் அளவில் உள்ள விலங்குகள் கணக்கெடுக்கப்படும். இதில் தொலைவு, கோணம் உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்படும். தானியங்கி கேமிரா, ஜி.பி.எஸ்., அளவீடுகள் மூலமாக பணிகள் நடக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.