தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :–

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூடேசன் என்பவரின் மகள் சுகன்யா;

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த சி.கே.வி. நாயர்; சிறுபாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் முருகேசன்; நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் நடேசன்;

கலியபெருமாள் என்பவரின் மனைவி கனகம்; விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் கதிரவன்;

ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், சி.கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் தங்கராசு மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

என இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending