பி.இ. கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

பி.இ.கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, பி.இ. கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விண்ணப்பம் பதிவு செய்த போது எந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதே முறை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 42 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.