பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன்கூறினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில், விவசாய நிலங்களை அழித்து 10 ஆயிரம் கோடி ரூபாயில் 8 வழிச் சாலை அமைப்பதால் ஏழைகளுக்கு எவ்வித பயனும் இல்லை. எனவே, மக்கள் நலன், விவசாயிகள் நலனுக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் 6-ஆம் தேதி போராட்டம் நடத்துகிறது. திருவண்ணாமலையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என்றார்.