தொடர்ந்து இந்தியாவில் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
அதன்படி இன்று சியோமி மி ஏ2 லைட் மற்றும் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. சியோமி நிறுவனம் இப்போது மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஜபோனின் நாட்ச் டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்
ஸ்னாப்டிராகன் 425: சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 81 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64 ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
இந்த சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 40000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.13,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.