October 24, 2021, 8:57 pm
More

    ARTICLE - SECTIONS

    விஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..!

    viswaroopam kamal - 1நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் இன்று வெளியானது. முன்னதாக இந்தப்படம் வெளியிடப்படக் கூடாது என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இன்று இந்தப்படம் வெளியானது ஆனால், புதுச்சேரி மற்றும் 8 மாவட்டங்களில் வெளியாகவில்லை.

    இதற்கு படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்துக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் விஸ்வரூபம் 2  வெளியாகவில்லை.

    இப்பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது.

    படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்னையால்,  இங்கெல்லாம் படம் வெளியாகாவில்லையாம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,586FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-