விஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..!

Published:

viswaroopam kamal - 2026நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் இன்று வெளியானது. முன்னதாக இந்தப்படம் வெளியிடப்படக் கூடாது என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இன்று இந்தப்படம் வெளியானது ஆனால், புதுச்சேரி மற்றும் 8 மாவட்டங்களில் வெளியாகவில்லை.

இதற்கு படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்துக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் விஸ்வரூபம் 2  வெளியாகவில்லை.

இப்பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது.

படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்னையால்,  இங்கெல்லாம் படம் வெளியாகாவில்லையாம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img