கேரள வெள்ள பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம்

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

edappadi pazanisamy - 2026

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.

கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும். கேரள மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.