1017838 china covid - 2026

சீனாவில் கொரோனா பரவலுக்கு இருவர் பலி..

உலகம்
1017838 china covid - 2026

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரித்து இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்போது கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால், கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி செலுத்தியிருந்தார்களா, என்ற தெளிவான விவரம் கொடுக்கப்படவில்லை. சீனாவில் இன்று 35 ஆயிரத்து 775- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 607 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 36 ஆயிரத்து 165 ஆகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,235- ஆக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.