
புது தில்லி:
வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.
உலகம் முழுவதும் வேலை தேடி சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டிலுள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பர். அவ்வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், கடந்த 2016ல் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 4,07,550 கோடி (62.7 பில்லியன் டாலர்) அனுப்பியுள்ளனர். இதன்மூலம் வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு அதிகளவு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு ரூ. 3,96,500 கோடி (61 பில்லியன் டாலர்) அனுப்பியுள்ளனர்.



