
சென்னை:
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கபபட்டது. 2 மாதங்களுக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். அவருக்கான சிகிச்சைச் செலவு ரூ.6 கோடயை ஜெயலலிதா முதல்வராக இருந்ததால், அரசே ஏற்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த மருத்துவச் செலவை தற்போது அ.தி.மு.க. (அம்மா) கட்சியே ஏற்றுக் கொண்டு, வழங்குகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அவர் இந்த காசோலையை அப்பல்லோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார். எடப்பாடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.



