பிக்பாஸ் மூலம் ‘விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரம் செய்யும்: கமல்.

பிக்பாஸ் மூலம் 'விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரம் செய்யும்: கமல்.

சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை தனது விஸ்வரூபம் படத்திற்காக சந்தித்ததாக ஒருசிலர் கூறி வரும் நிலையில் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் தனது விஸ்வரூபம் 2′ படத்தை புரமோஷன் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வரும் நிலைஇல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் ‘அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று கமல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல் தனது படத்தை புரமோஷன் செய்ய இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது

யூடியூப், சமூக வலைத்தளங்களை விட பிக்பாஸ் மூலம் தனது படத்தை புரமோஷன் செய்தால் அதிகளவிலான ரசிகர்களை இந்த பாடல் ரீச் ஆகும் என்ற நோக்கத்தில் கமல் இருப்பதாக தெரிகிறது

கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது