தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!

Published:

railway news - 2026
#image_title

ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,

[1] தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயிலின் எண் – 06137.
இந்த ரயில் நாளை 24/01/26 சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் 25/01/26 ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

[2] செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு
ரயிலின் எண் – 06138.
இந்த ரயில் 26/01/26 திங்கள்கிழமை பகல் 03.00 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் 27/01/26 செவ்வாய்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலில் 23 ICF பெட்டிகள் இணைக்கப்படும்.
1) முதல் வகுப்பு ஏசி பெட்டியும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியும் ஒன்றிணைந்த பெட்டி— 1.
2) இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி -1.
3)மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-3.
4) ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் பெட்டி – 12.
5)முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 4.
6) லக்கேஜ் மற்றும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்-2.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

முன்பதிவு தற்போது ரயில்வே இணைய தளத்தில் தொடங்கி இருக்கிறது. மேலும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நாளை 24/01/26 சனிக்கிழமை காலை முன்பதிவு துவங்கும்.

இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் – செங்கோட்டை இடையே செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக இயக்கப்படும்.

இந்ந்லையில், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் , தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் அனந்தன் அய்யாசாமி, முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை- தாம்பரம் இடையே குடியரசு தின விழா சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்ததற்காக தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img