அடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான்: சாருஹாசன் கருத்தால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி

சினி நியூஸ் சினிமா
rajini charu kamal - 2026அடுத்த தமிழக முதல்வர் கனவில் இருக்கும் கமல்ஹாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்து விறுவிறுப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கூட விசில் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவது கமல் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமலஹாசனின் சகோதரர் சாருஹாசன் தனது ஃ[பேஸ்புக்கில் அடுத்த முதல்வர் ரஜினிதான் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் என்றும், இந்த கருத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று சாருஹாசன் கூறியுள்ளார்.
சாருஹாசனின் இந்த கருத்தால் கமல் ரசிகர்களும், கமல் கட்சியின் தொண்டர்களும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.