
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மலை மீது புனித நீர் தெளிக்கப் பட்டது.

அருணாசல மலை மீது தெளிப்பதற்காக, புனித நீர்க் குடங்களுக்கு இன்று கோயில் இரண்டாம் பிராகாரத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்யப் பட்டன. பின்னர் சுவாமி எழுந்தருளச் செய்யும் பணியாளர்களால் புனித நீர் கலசலத்தில் மலைமீது எடுத்துச் செல்லப்பட்டது.

மலை உச்சியின் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. திருக்கோயில் பிச்சகர் விஜயகுமார் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார்.
- எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை