
காதி கிராமோத்யாவின் மற்றொரு சிறப்பான முயற்சி.. அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்த செய்தி இது. கிராமப் புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வேதிக் பெயிண்ட் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
கிராமப்புற பொருளாதாரம் அதிகாரமளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கட்டும் எனவே நாங்கள் விரைவில் மாட்டு சாணியால் செய்யப்பட்ட ‘வேத பெயிண்ட்’ யை Khadi and Village Industries Commission மூலம் தொடங்க இருக்கிறோம்.
தொலைதூர மற்றும் எமுல்ஷனில் வரும் இந்த பெயிண்ட் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுடன், நச்சு அல்லாத, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு தன்மை கொண்டது மற்றும் வெறும் நான்கு மணி நேரத்தில் உலர்ந்துவிடும். கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 55 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருமானம் தரும்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய வேதிக் பெயிண்ட் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது.எளிதில் பூஞ்சை பிடிக்காமலும்,சாயம் போகாமலும் கிருமி எதிர்ப்பு அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கும்.விரைவில் சந்தைக்கு வருகிறது டிஸ்டம்பர் எமல்ஷன் இரண்டு வடிவிலும்.
- ராஜேஷ் ராவ்