பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவும் காயத்ரி ரகுராமும் எதிரிகள் போல் நடந்து கொண்டார்கள். குறிப்பாக ஓவியாவை ஓரம்கட்ட காயத்ரிரகுராம் செய்த முயற்சிகள் பார்வையாளர்களை கோபமடைய செய்தன.
இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஓவியாவுக்கு காயத்ரிரகுராம் உருகி உருகி வாழ்த்து கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
ஓவியாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீ எப்படி பிரபலமடைந்தாயோ அதே போல் திரைப்படங்களின் மூலமும் நீ பிரபலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு நீ அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் இதை ஒரு தோழியாகமின்றி ஒரு சகோதரியாகவும் கூறுகின்றேன். நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன். இதை நான் விளையாட்டிற்காக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் இவை. உனக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு’ என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த வாழ்த்துக்கள் ஓவியா ஆர்மியினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது
ஓவியாவுக்கு மனமுருகி காயத்ரி ரகுராம் வாழ்த்து கூறியது ஓவியாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.