கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கு காரணம் சின்ன பட்ஜெட் படங்கள் செய்யும் வசூல் தான் காரணம்
பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்கள் வசூல் செய்வதில் ஒரு சிறு பகுதி கூட சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வசூல் செய்வதில்லை
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘சில நேரங்களில்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் மூலம் இன்று முதல் ரிலீஸ் ஆகிறது.
ஐசரிவேலன், பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றால் இனிவரும் காலங்களில் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.