காவிரி பிரச்சனை காரணமாக ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னடர்கள் சிலர் கூறி வரும் நிலையில், கன்னட படத்தில் பாடல் ஒன்றை பாடுகிறார் நடிகர் சிம்பு. இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடவுள்ளதாகவும், இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்று நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விரைவில் பிரபல கன்னட இயக்குனர் இயக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவும் உள்ளாராம்.
சமீபத்தில் காவிரி குறித்து சிம்பு கூறிய கருத்துக்கு கன்னடர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது என்பதும், சிம்புவின் வேண்டுகோளை ஏற்று தமிழக பேருந்துகளில் பயணம் செய்த தமிழர்களுக்கு கன்னடர்கள் தண்ணீர் கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் கன்னடர்களுக்கு ஆதரவாக பேசி, கன்னடர்களின் நன்மதிப்பை பெற்ற நடிகர் சிம்பு, தற்போது மீண்டும் கன்னடர்களை மகிழ்விக்கும் வகையில் கன்னட படம் ஒன்றில் பணிபுரியவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.