மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.
சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை சட்டவிரோத மானது என அறிவித்து தடை விதிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை சேலம் 8 வழி விரைவு பசுமை சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் 2,791 ஹெக்டேர் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த திட்டத்துக்கு 1,900 ஹெக்டேர் நிலங்களே போதுமானது எனும்போது கூடுதல் நிலங்கள் எதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது என் பதை அதிகாரிகள் தெளிவு படுத்தவில்லை. 120 ஹெக்டேர் நிலங்கள் வனப்பகுதியில் கைய கப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி 277.3 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள இப்பாதையில் 3 குகைப்பாதைகள், 23 பெரிய பாலங்கள், 156 சிறுபாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இதனால் 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவுள்ளது. தவிர 1 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படவுள்ளது. 22 கிமீ தூரத்துக்கு அடர்ந்த வனப் பகுதி வழியாக இப்பாதை அமைக்கப்படவுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பேராபத்து ஏற்பட் டுள்ளது. சேர்வராயன், கல்ராயன் என 8 மலைகள் இதனால் பாதிக்கப்படும்.
குறிப்பாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சொல்ல முடியாத துயரங்களை அனு பவிக்க நேரிடும். இந்த திட்டத் துக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் கடும் ஆட் சேப னைகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும் காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக மற்றொரு பாதையும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த 8 வழிச்சாலை திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். எனவே எட்டுவழிச்சாலை திட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே சேலத்துக்கு உள்ள 2 பாதைகளையும் அகலப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்தமனு விரைவில் விசாரணைக்கு வந்தது