ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் ஆய்வு

ஜம்புநதி மேல்மட்டகால்வாய் திட்டம் ஆய்வுப்பணிகள்

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ராமநதி நீர்தேக்கம். இந்த நீர்தேக்கத்தின் உபரிநீரை ஜம்புநதியில் இணைப்பதற்காக  மேல்மட்டகால்வாய் அமைக்கபட உள்ள இடத்தையும், அதற்கான நிலம்கையகப்படுத்தவேண்டிய நிலங்களையும் மாவட்டஆட்சியர்  மு.கருணாகரன் மற்றும் அதிகாரிகளுடன் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 25-ம் தேதி சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் 42 கோடி ஒதுக்கீடு செய்ய அறிவித்தார். மேலும் அதன் பூர்வாங்க பணிக்காக முதற்கட்டமாக 5 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மாவட்டஆட்சியர் மு.கருணாகரன்,கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி ஆகியோர் பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் சென்று ராமநதி நீர்தேக்கத்தின் உபரிநீர் அளவு மற்றும் ஜம்புநதி மேல்மட்டகால்வாய் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் கூறியதாவது.
 திருநெல்வேலில் மாவட்டம் ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய் அமைத்து மத்தளம்பாறை,திப்பணம்பட்டி ,ஆவுடையனூர் ,தெற்குகடையம் ,கீழக்கடையம் மற்றும் பொட்டல்புதூர்,வெங்கடாம்பட்டி,மடத்தூர் ஆகிய பகுதிவிவசாய மக்கள் பயன்பெறும் வகையில் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு செய்தார் இதன் மூலம்  4050 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெரும் மேலும் 10 கண்மாய்கள் ,நீட்டிப்பு கால்வாய் மூலம் 7 கண்மாய்களும் பயன்பெரும் மற்றும் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள 729 கிணறுகளின் நீர் செறிவூட்டப்படும் இத்திட்டத்தை செயல்படுத்த 45.28 ஏக்கர் பட்டா நிலங்கள் கையப்பபடுத்தபட உள்ளது ,முதற்கட்டமாக நிலங்கள் கையப்பபடுத்துதல் மற்றும் விரிவான ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்காக ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய்  செய்து உத்தரவிட்டுள்ளார்கள் நிர்வாக அனுமதி கிடைத்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது சம்மந்தமான பணிகளை துவங்குவார்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி .பிரபாகரன்,மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நீர் நிலைமை ,நீரின் கொள்ளவு உபரி நீர் பற்றிய ஆய்வுகளும் மற்றும் இடங்கள் பார்வையிடப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்
 இது குறித்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கூறியதாவது கடந்த  2001 -2006ஆட்சிகாலத்தில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் ,ஜம்பு நதியில் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா  25.9.2015அன்று சட்டசபையில் ஜம்பு நதியில் இருந்து 42 கோடி மதிப்பீட்டில் ராமநதியில் மேல்மட்ட கால்வாய் அமைக்க ஆரம்பகட்ட பணிகளுக்கு ரூ.42 கோடி மதிப்பீட்டில் ராமநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க நிதி ஒதுக்குவத்காக அறிவித்தார் ,இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் இப்பகுதியில் உள்ள கிணத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது இத்திட்டம் இப்பகுதி மக்களின் 35 ஆண்டுகால கனவு திட்டம் அதை நிறைவேற்ற  உத்தரவிட்ட முதல்வருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்
ஆய்வின் போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு, பயிற்சி உதவிகலெக்டர் கார்த்திகேயன், பொதுபணித்துறை செயற்பொறியாளர் காளிராஜ், உதவிசெயற் பொறிளாளர் மாரியப்பன், மேல்மட்ட கால்வாய்திட்ட செயற்பொறியாளர் நாகராஜ்,  அம்பாசமுத்தரம் தாசில்தார் பால்துரை, உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டியன், கடையம் யூனியன் முன்னாள் தலைவர டி.பொன்னுத்துரை, கீழப்பாவூர் யூனியன் துனைத்தலைவர் உத்திரகுணபாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, ராதா, கடையம் ஒன்றியகவுன்சிலர் முருகேசன் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.