4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரமோத் குமார் மண்டபம் பகுதி அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். கோவை காவல்துறை ஆணையராக சுமித்சரண் நியமனம் செய்யப் பட்டுள்ளார். மேலும், கோவை ஆணையராக இருந்த பெரியய்யா, மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப் பட்டுள்ளார்.