சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர் தட்டுப்பாடுதான் காரணமாக கூறப்படுகிறது
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ (express avenue) மூடப்படுவதாக வணிக வளாக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது. சிரமத்துக்கு வருந்துகிறோம் என அவர்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் வணிக வளாகம் மூடப்பட்டதுக்குத் தண்ணீர் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் அவென்யூ முற்றிலும் தனியாரிடமிருந்து தண்ணீர் வாங்கி உபயோகித்து வரும் ஒரு வணிக நிறுவனம். இந்த வணிக வளாகத்துக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கானக்கான மக்கள் வந்துசெல்வர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இன்றைய தினம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் எனவும் கூறபடுகிறது