கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘பேட்ட’ திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பேட்ட என்பது முழு பொழுதுபோக்கு திரைப்படம். டிசம்பரில் கட்சி அறிவிப்பு வெளியாகாது. கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராக உள்ளன. நேரம், காலம் பார்த்து, நான் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறேன்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப் படும்போது எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் – என்று ரஜினிகாந்த் கூறினார்.
பேட்ட திரைப்படத்திலிருந்து ஒரு டயலாக்கை சொல்லிக் காட்டுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் ‘பேட்ட பராக்’ என்று கூறிவிட்டு கிளம்பினார்!