சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50இ கேலக்ஸி ஏ30இ கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7884 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.
கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ20 சாதனத்தில் 400எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.