இன்று விற்பனைக்கு வருகின்றது பஜாஜ் க்யூட்

பஜாஜின் குவாட்ரிசைக்கிள் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் க்யூட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகின்றது. இந்தியாவில் கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் க்யூட் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கர ஆட்டோ மற்றும் நான்கு சக்கரங்கள் பெற்ற சிறிய ரக கார் போன்றவற்றுக்கு இடையில் மைக்ரோ கார் போன்ற வடிவமைப்பினை பெற்ற குவாட்ரிசைக்கிள் மாடலுக்கு இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது. தனிநபர் மற்றும் வரத்தகரீதியான பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போவில் 2012 ஆம் ஆண்டு பஜாஜ் ஆர்இ60 என காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் க்யூட் என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு குவாட்ரிசைக்கிள் அனுமதிக்கப்படவில்லை. பிறகு நீண்ட நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதியை பஜாஜ் பெற்றது. தற்போது இந்தியா தவிர 30 க்கு மேற்பட்ட நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா உட்பட பஜாஜ் விற்பனை செய்து வருகின்றது.

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 ஸ்பார்க் பிளக்குகளை பெற்ற 216 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

பஜாஜ் க்யூட் மினி காரின் மைலேஜ் லிட்டருக்கு 36 கிலோ மீட்டர் ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலை எக்ஸ்பிரஸ் சாலைகளில் இயக்க வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது. 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்ரிசைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.

குவாட்ரிசைக்கிள் ரக பஜாஜ் க்யூட் விலை ரூ. 2.63 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம். கூடுதலாக சிஎன்ஜி அம்த்தை பெற்ற மாடல் ரூ. 2.83 லட்சம் ஆக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...