குரூப் 1 தேர்வு ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் -1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

அரசுத் துறையில் சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பிரிவுகளில் 139 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3ம் தேதி வெளியான நிலையில், குரூப் 1 தேர்வு எழுதிய விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், ‘தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் குரூப் 1 தேர்வு எழுதினர். ஏப்ரல் 3ம் தேதி குரூப் 1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவில், 950 பேர் குரூப் 1 மெயின் தேர்வுக்கு தேர்வானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவில் தேர்வர்களின் பெயர், பாலினம், பிரிவு என முக்கிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று விக்னேஷ் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...