இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார் கேரள கவர்னர்
கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவத்திற்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் என ராஜ்பவன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று…
கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவத்திற்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் என ராஜ்பவன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். அதன்பின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply