super 30 - 2026ஜூலை 12ந் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சூப்பர் 30. ஹிருத்திக் ரோஷன், மிருனாள் தாக்கூர், வீரேந்திர சக்சேனா, பங்கஜ் திரிபாதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

குயின் படத்தை இயக்கிய விகாஷ் பால் இயக்கி உள்ளார், பாந்தோம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் புகழ்பெற்ற சமூக ஆர்வலரான ஆனந்த் குமார் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப் பட்டது. ஆனந்த் குமார் பீகார் மாநிலத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ள 30 மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு செய்து அவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி கொடுத்து உயர்த்தி விடுவதுதான் அவரின் சூப்பர் 30 என்ற திட்டம்.

இந்த திட்டத்தில் இதுவரை 212 மாணவர்களை ஐஐடியில் சேர்த்துள்ளார். அவர் சந்தித்த சவால்களை கொண்டுதான் படம் தயாராகி உள்ளது. ஆனந்த் குமார் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

அதனை ஏற்று பீகார் மாநில அரசு படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகாரை தொடர்ந்து இந்தி மொழி பேசும் மற்ற வட இந்திய மாநில அரசுகளும் வரிவிலக்கு அறிவிக்க இருக்கிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

One response to “ஹிருத்திக் ரோஷன் படத்திற்கு வரிவிலக்கு !”

  1. நேர் மறையான கருத்துக்களை கொண்ட படங்கள் மனதிற்கு நல்லது. வரி விலக்கு பாராட்டுக்குரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending