நடிகர் சந்தானம் நடித்துள்ள படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
எனவே நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் இந்து தமிழர் கட்சி சார்பில் பழனி காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.